04/03/2012
சுயமரியாதை - SELF RESPECT
ஒரு மனிதனின் வாழ்வில் தன்னம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு சுய மரியாதையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன் எப்பொழுது தன்னம்பிக்கை இழகிறானோ அப்பொழுதே அவனது சுயமரியாதையும் அவனை விட்டு விலகுகிறது. ஒருவன் நிரந்தரமாக தோல்விகளை தழுவும்போது அவன் சில நேரம் தன்னம்பிக்கை இழக்க நேரிடுகிறது. அப்படி அவன் தன்னம்ன்பிக்கை இழக்கும் நிலையில் அவன் பிறரின் வெற்றிகளை தனது தோல்விகளோடு ஒப்பிட்டு பார்க்கத் துவங்குகின்றான். சில சமயங்களில் அவனுடைய இந்த ஒப்பிட்டு பார்க்கும் தன்மையானது அவனை செயல் இழக்க செய்கிறது, அதனால் அவன் தன்னை தானே பிறரிடத்தில் தாழ்த்தி பேச துவங்குகிறான். அவனது தாழ்வு மனபான்மையானது அவனது சிந்தனையை செயல் இழக்கச்செய்து அவனது நடை, உடை, பாவனை, என்ற அனைத்திலும் பிறரை விட வேறுபட்ட இழிவு நிலையிலும், மனம் குன்றிய நிலையிலும் மாற்றிவிடுகிறது.
என்று ஒருவன் தன்னை தானே முதலில் புரிந்து கொண்டு மதிக்கதுவங்குகிரானோ அப்பொழுதுதான் அவன் பிறரைவிட உயர்ந்து நிற்கிறான், இந்த உலகமும் அவனை சிறந்தவனாக காண்கிறது மற்றும் அவனது கருத்துக்களுக்கும் செவி சாய்க்கிறது. எவன் ஒருவன் சுயமரியாதை இன்றி வாழ்கிறானோ அவன் செல்வம் இருந்தும் ஏழை.... எவன் ஒருவன் சுயமரியாதையுடன் வாழ்கிறானோ அவன் ஏழையாய் இருந்தும் செல்வந்தன் ஆவான். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் தனக்கென மரியாதையும் மதிப்பும் எதிர்பர்கிறான் என்பது நியமான விஷயம்தான். ஆனால் அதற்கு அவன் தகுதியானவனா என்பதுதான் கேள்வி. சில மனிதர்கள் தங்களுக்கு சமுதாயத்தில் தனியான மரியாதை எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பதற்காக அவர்களின் சொந்த வேலையை கூட செய்யத்தவரிவிட்டு, போலியான வேஷம் கட்டி அலைகிறார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படி போலியான பெருமைக்காக அலைவது முட்டாள்தனமே அன்றி சுயமரியாதை ஆவதில்லை. சுயமரியாதை என்பது ஒருவன் தன்னை தானே சரியாக புரிந்து கொண்டும் , தனது திறமைகளை அறிந்து கொண்டும், பிறரோடு தன்னை ஒப்பிட்டு பாராமல் தனக்கென சமுதாயத்தில் ஒரு தனித்துவத்துடன் வாழ்கிறான், வாழ்வின் இலட்சியத்தை அடைகிறான்.

தொடரும்................
உங்கள் அன்புள்ள
(மஞ்சை மயிலனின்)
கிருஷ்ணா
No comments:
Post a Comment