Saturday, 3 March 2012

உன் வாழ்க்கை உன் கையில்

                                                                                                                03/03/2012
உன் வாழ்க்கை உன் கையில்

              நாம் வாழ்க்கை என்ற ஒன்றை எவ்வாறு கொண்டு செல்கிறோம். எவரேனும் சற்று நேரம் அதற்காக மாற்றி வைத்து சிந்திபதுண்டா என்றால் .........இல்லை. ஏனென்றால் யாருக்கும் அதை பற்றிய சிந்தனையோ, நேரமோ இல்லை என்பதுதான் உண்மை. எல்லோருடையே வாழ்விலும் பரபரப்பு......... இன்று செய்து முடித்தாக வேண்டிய வேலைகள் ................ நாளை  செய்தாக வேண்டிய வேலைகள் என்று மிகவும் பரபரப்புடன் நமது மனமும் மூளையும் செயல்பட்டு கொண்டிரிக்கிறது

             நாம் சிறிது நேரமேனும் நமது நடைமுறை வாழ்வை பற்றி சிந்திக்க வேண்டும். நாம் நமது வாழ்கையை சரியானே முறையிலேதான் வாழ்கிறோமா, நமது தற்போதைய வாழ்கை முறை நமது வெற்றிக்கு வழிவகுக்குமா என்றெல்லாம் சிந்தித்து பார்க்கவேண்டும், நாம் வாழ்வில் முன்னேறவேண்டுமெனில் நம்மிடம் இறுக்க வேண்டிய தகுதிகள் ஏனென்ன............... ஏன் குழப்பமாக  இருக்கிறதா  ................ நம் வாழ்வில் வெற்றி பெற மிக முக்கியமான  ஓன்று தன்னம்பிக்கை ..............

தன்னம்பிக்கை;

                  ஒரு மனிதனின் தன்னம்பிக்கை என்பது அவன் வாழ்வின்  வெற்றியின் ஆணிவேர் ஆகும். ஒருவன் எப்பொழுது தன்னம்பிக்கை பெறுகிறான் என்றால் அவனை பற்றி அவன் சரியாக புரிந்துகொள்ளும்போதுதான். ஒருவன் எப்பொழுது தன்னை சரியாக புரிந்து கொள்கிறானோ அன்றுதான் அவன் வெற்றி படிகளில் கால் பதிக்கிறான். தன்னம்பிக்கை ஏன் பலருக்கும் இல்லாமல் போகிறது ....... நீங்கள் என்றாவது அதைப்பற்றி சிந்தித்ததுண்டா.......... எனது அனுபவத்தில் பலரும் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவதின் முக்கிய காரணமே தன்னை மற்றொருவரருடன்    ஒப்பிட்டு பார்பதுதான். ஒவ்வொரு  மனிதனுக்கும் இயல்பிலேயே இறைவனால் அருளப்பட்ட ஒரு திறமை இருக்கிறது, ஆனால் பலரும் தன்னில் உள்ள திறமையை உணரமுடியாமல், வெளிபடுத்த முடியாமல் மற்றோரின் திறமைகளை கண்டு திகைத்து நிற்கிறார்கள். அவன் மிக நன்றாக கவிதை எழுதிகிறான், அவனை போல் ஆங்கிலம் பேச யாராலும் முடியாது, அவனை போல் நான் அழகாக இல்லையே, அவனை போல் எனக்கு செல்வாக்கு இல்லையே ......... என்று நாம் சராசரி நமது குறைகளை நாமே சுட்டிகாட்டி கொண்டும் மற்றவரின் மிகைகளை கண்டு புலம்புவதுமட்டுமாகவே வாழ்கிறோம்......... ஏன் நம்மை நாம் உயர்வாக நினைக்ககூடாது.........  நான் திறமையானவன்... எனக்கு   நான் நினைத்த காரியங்களை சிறந்த முறையில் செய்துதீற்பதர்கான திறமை உள்ளது ......... நான் எனது வெற்றி இலக்கை அடைய யாரையும் சார்ந்திருபதில்லை.... எனது வெற்றியின் வழியை நானே நிர்ணயம் செய்கிறேன்.......... எனது வெற்றி இலக்கு என்பது எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நெஞ்சம் எனக்கு இருக்கிறது...... நான் மற்றொருவரை விட எந்த விதத்திலும் இளைத்தவன்  அல்ல.......... இப்படியெல்லாம் நமது சிந்தனையை, மனதை    சரியான வெற்றியின்  பாதயில் கொண்டு செல்லலாமே.


                       ஒருவன் தன்னை மற்றொருவனோடு என்று ஒப்பிட்டு பார்கத்துவங்குகிரானோ    அன்று முதல் அவன் பார்வையும் சிந்தனையும் குருடாக்கப்படுகிறது என்று பொருளாகிறது. ஏனென்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனி திறமை இறைவனால் அருளப்படுகிறது, ஆனால் அது எப்பொழுது  வெளிப்படும் என்று கேட்டால் அது ஒவ்வொரு  மனிதனின் சிந்தனை செயலாற்றதை  பொறுத்தது........  அந்த திறமை பத்து வயதிலும் வெளிப்படலாம் முப்பது வயதிலும் வெளிப்படலாம் அறுபது வயதிலும் வெளிப்படலாம். ஆனால் இருபதில் வெளிப்படுத்த முடியாமல் அறுபதில் வெளிப்படுத்தி யாருக்கு என்ன பயன். அதனால் நமது திறமை என்ற இறைவனின் கொடையை சரியான நேரத்தில் பயிர் செய்து, சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். அப்படி எவன் ஒருவன் தனது திறமைகளை அறிந்து கொண்டு வெற்றிப்பாதையை நோக்கி நகர்கிரானோ  அவன் நிச்சயமாக தன்னம்பிக்கை பெறுகிறான். அந்த தன்னம்பிக்கை  அவன் இலட்சியத்தை அடைகிறது.


                                                                   தொடரும்................


                                                                                                                                                               உங்கள் அன்புள்ள
                                                                                                                                                              
(மஞ்சை மயிலனின்)
                                                                                                                                                                      கிருஷ்ணா

No comments:

Post a Comment